சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை(மே 15) முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து டோக்கன் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்கு நோயாளிகளும் வருவதால் கூட்டம் அதிகம் காணப்பட்டதை அடுத்து, ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்ப்பாகம் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து நேரு விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, நேரு விளையாட்டு அரங்கில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும். நாளை(மே 15) காலை 9 மணிக்குத் தொடங்கி நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மருந்து வழங்கப்படும் என்றும் கூட்டத்தைத் தவிர்க்க நேரு விளையாட்டரங்கில் கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.