வெளியானது நீட் தேர்வு முடிவுகள்
2021
இளங்கலை
மருத்துவ படிப்பிற்கான நீட்
தேர்வு முடிவுகள் சற்று
முன் வெளியானது.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த
சில மாதங்களுக்கு முன்னர்
நடைபெற்றது என்பதும் இந்த
தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதினார்
என்பதும் தமிழகத்தில் மட்டும்
1.10 லட்சம் மாணவர்கள் நீட்
தேர்வை எழுதினர் என்பதும்
குறிப்பிடத்தக்கது
இந்த
நிலையில் நீட் தேர்வு
முடிவுகள் வெளியிட உச்ச
நீதிமன்றம் அனுமதி அளித்ததை
அடுத்து சற்றுமுன் தேசிய
தேர்வு முகமை நீட்
தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நீட்
தேர்வு முடிவுகள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள்
தங்களுடைய மின்னஞ்சல் முகவரி
மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை தெரிந்து
கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும்
மாணவர்களின் மின்னஞ்சல் முகவரியிலேயே நீட் தேர்வில் அவர்கள்
பெற்ற மதிப்பெண்கள் குறித்த
தகவல்களும் இருக்கும் என
தேசிய தேர்வு முகமை
அறிவித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
Official Site: Click
Here