ஓரிரு நாள்களில்
நெட் தேர்விற்கான முடிவுகள்
வெளியீடு
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பில்:
கரோனா
நோய்த் தொற்று காரணமாக
டிசம்பர் 2020ல் நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வுகள்
நடைபெறவில்லை. டிசம்பர்
2020 மற்றும் ஜூன் 2021 ஆகிய
ஆண்டுகளில் நடைபெறவிருந்த தேர்வுகள்
தேசிய தேர்வு முகமையால்
20 ஜனவரி 2021 முதல் 5 ஜனவரி
2022 வரை நடத்தப்பட்டன.
81 பாடத்திட்டங்களுக்கு நாடு முழுவதும்
239 நகரங்களில் உள்ள 837 தேர்வு
மையங்களில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வுகளை எழுதினர். இந்த
தேர்வின் முடிவுகளை அறிவிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர்
பேராசிரியர் எம்.ஜெகதீஸ்
குமார், தேசிய தேர்வு
முகமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்னும் ஓரிரு
நாள்களில் தேர்வின் முடிவுகள்
வெளியிடப்படவுள்ளன.