CA முதல்நிலைத் தேர்வு
அட்டவணை வெளியீடு
இந்திய
பட்டய கணக்காளர்கள் வாரியம்
(ICAI) பட்டயக் கணக்கறிஞர்கள் (CA) தொழிலை
வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வ
நிறுவனம் ஆகும். பட்டயக்
கணக்காளராக விரும்பும் நபர்கள்
ICAI வாரியம் நடத்தும் தகுதித்
தேர்வில் கட்டாயம் தேர்ச்சி
பெற வேண்டும். தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மத்திய
அரசிடம் இருந்து சான்றிதழ்
வழங்கப்படும். இவர்கள்
மத்திய அரசால் பதிவு
செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள்.
வழக்கமாக
CA தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு
முறை நடத்தப்படும். நடப்பு
ஆண்டுக்கான முதல் தேர்வுகள்
2021 ஜூன் மாதம் நடத்தப்பட
உள்ளது என்று அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
ஜூன் மாதம் 24, 26, 28 மற்றும்
30ம் தேதிகளில் நடக்க
உள்ளது. ஆரம்ப தேர்வுகளுக்கான முதல் மற்றும் இரண்டாம்
தாள் மதியம் 2 முதல்
5 மணி வரையும், மூன்றாம்
மற்றும் நான்காம் தாள்
2 மணி முதல் 4 மணி
வரையும் நடக்கும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து
தாள்களுக்கும் வாசிப்பு
நேரமாக கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும். தேர்வு
வாரியம் தேர்வு அட்டவணையை
வெளியிடும் போதே தேர்வு
வாரியம் அறிவித்துள்ள நாட்களில்
மத்திய மற்றும் மாநில
அரசுகளின் பொது விடுமுறை
அறிவிப்புக்கள் வந்தால்
அவை தேர்வை கட்டுப்படுத்தாது.