TAMIL MIXER
EDUCATION.ன்
மருத்துவ
செய்திகள்
மருத்துவ படிப்புகளுக்கான
தரவரிசை
பட்டியல்
இன்று
வெளியீடு
M.B.B.S., B.D.S.,
படிப்புகளுக்கான
தரவரிசை
பட்டியல்
இன்று
வெளியிடப்பட
உள்ளது.
தமிழகத்தில், இந்த கல்வியாண்டுக்கான
எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கு,
செப்.,
22 முதல்
இம்மாதம்,
6ம்
தேதி
வரை,
www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பப்பதிவு
நடந்தது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 22 ஆயிரத்து 643 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 13 ஆயிரத்து 457 பேர் என, மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து, எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கு
அரசு
ஒதுக்கீடு,
நிர்வாக
ஒதுக்கீடு
மற்றும்
அரசின்,
75 சதவீத
உள்
இட
ஒதுக்கீட்டுக்கான
தரவரிசை
பட்டியலை,
மக்கள்
நல்வாழ்வுத்துறை
அமைச்சர்
சுப்பிரமணியன்,
சென்னை
ஓமந்துாரார்
அரசு
பல்நோக்கு
மருத்துவமனையில்
இன்று
வெளியிடுகிறார்.
அதன்பின்,
கலந்தாய்வு
நடக்கும்
தேதி
குறித்த
விபரங்களை
தெரிவிக்க
உள்ளார்.
மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் முத்துச்செல்வன் கூறுகையில்:
மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான
சிறப்பு
பிரிவு
கலந்தாய்வு
மற்றும்
அரசு
பள்ளி
மாணவர்களுக்கான,
7.5 சதவீத
உள்
இடஒதுக்கீடு
கலந்தாய்வு
நேரடியாக
நடக்கும்.
பொதுப்
பிரிவினருக்கான
கலந்தாய்வு
ஆன்லைனில்
நடைபெறும்.