ICSE 10, 12-ம்
வகுப்புப் பொதுத் தேர்வு
அட்டவணை வெளியீடு
ICSE
10, 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத்
தேர்வு நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டு, அதற்கான
அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி
ஏப்ரல் 8-ம் தேதி
12-ம் வகுப்புக்கும், மே
5-ம் தேதி 10-ம்
வகுப்புக்கும் தேர்வுகள்
தொடங்குகின்றன.
நாடு
முழுவதும் கரோனா பரவலால்
நடப்புக் கல்வி ஆண்டு
பள்ளிகள் திறப்பில் தாமதம்
ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள்
நடத்தப்பட்டன. சிஐசிஎஸ்இ
எனப்படும் இந்தியப் பள்ளிச்
சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில்
சார்பிலும், ஆன்லைன் மூலம்
வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும் சிஐசிஎஸ்இ சார்பில் ஐசிஎஸ்இ
தேர்வுகள் நடத்தப்படும் சூழலில்,
இந்த ஆண்டுக்கான பொதுத்
தேர்வு அறிவிப்பு வெளியாகி
உள்ளது.
Class 10th Time Table PDF: Click Here
Class 12th Time Table PDF: Click Here
Official Site: Click Here
இதுகுறித்து ICSE தலைமை
நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி
ஆரதூன் கூறுகையில்:
10-ம்
வகுப்புப் பொதுத் தேர்வுகள்
மே 5-ம் தேதி
தொடங்கி ஜூன் 7-ம்
தேதி முடிவடைகின்றன. 12-ம்
வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல்
8-ம் தேதி தொடங்கி
ஜூன் 16-ம் தேதியன்று
முடிகின்றன.
கடந்த
ஆண்டு ICSE 12-ம்
வகுப்புக்கான தேர்வு
நடந்து கொண்டிருந்தபோதே கரோனா
வைரஸ் பரவல் நாட்டில்
தொடங்கியதால், தேர்வுகள்
நடத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 10-ம்
வகுப்புத் தேர்வும் நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஐசிஎஸ்இ,
ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள்
முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Class 10th Time Table PDF: Click Here
Class 12th Time Table PDF: Click Here
Official Site: Click Here