Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும், இந்த கல்வி ஆண்டில் முதல் ஆண்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டிய கால அட்டவணையையும் பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நவம்பர் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2021 மார்ச் 8ம் தேதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி), முதலாம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இதன்படி, கல்வி நிறுவனங்கள் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை உரிய வழிகளில் முடிக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கான தேவையான தகுதியுள்ள சான்றுகள் டிசம்பர் 31ம் தேதி வரை ஏற்கப்பட வேண்டும். மெரிட் மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் நவம்பர் 31ம் தேதி வரை நிரப்பலாம். இந்த கல்வி ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்குவதால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்காட்டி கீழ்கண்டபடி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
- முதலாம் ஆண்டு அல்லது முதல் பருவத்துக்கான வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்க வேண்டும்.
- முதல் பருவத் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை 2021 மார்ச் 1ம் தேதி முதல் 2021 மார்ச் 7ம் தேதி வரை செய்ய வேண்டும்.
- தேர்வுகளை 2021 மார்ச் 8ம் தேதி முதல் 26ம் தேதிவரை நடத்த வேண்டும். * பருவத் தேர்வுக்கு பிறகான இடைவேளை மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் 2021 ஏப்ரல் 5ம் தேதி தொடங்க வேண்டும்.
- அடுத்த தேர்வுக்கான முன்னேற்பாடுகளை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை செய்யலாம்.
- அடுத்த தேர்வுகள் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்த வேண்டும். * பருவத் தேர்வுக்கான இடைவேளை ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை எடுத்துக் கொள்ளலாம்.
- இந்த முதலாண்டு மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு என்பது ஆகஸ்ட் 30ம் தேதியில் தொடங்கும்.
(மேற்கண்ட மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால், பல்கலைக் கழகங்கள் இந்த கல்வி ஆண்டை 2020 நவம்பர் 18ம் தேதியில் தொடங்கும் வகையில் திட்டமிடலாம். அதேபோல கற்பித்தல் தொடர்பான பணிகளை ஆன்லைன் முறையிலேயே தொடரலாம்)
- அனைத்து பல்கலைக் கழகங்களும் இந்த கல்வி ஆண்டில் வாரம் 6 நாட்கள் பணிநாட்கள் என்பதை பின்பற்ற வேண்டும். இது 2020-2021 மற்றும் 2021-2022 வரை பின்பற்றப்பட வேண்டும்.
- கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டு பணப் பிரச்னையில் சிக்கியுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் சான்றுகளை திரும்பப் பெறும் போது அனைத்து கட்டணங்களையும் பிடித்தம் ஏதும் இல்லாமல் நவம்பர் 31ம் தேதி வரை திரும்ப வழங்க வேண்டும். டிசம்பர் 31ம் தேதிக்குள் சான்றுகள் திரும்ப கேட்கும் பெற்றோரிடம் அனைத்து கட்டணத்தையும் பிடித்தம் இல்லாமல் வழங்க வேண்டும், அப்படி ஏதாவது பிடித்தம் செய்ய வேண்டியிருந்தால் அதிகபட்சமாக ரூ.1000 புராசசிங் கட்டணமாக பிடித்தம் செய்யலாம்.
- இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்கள் தாமதம் இல்லாமல் உரிய நேரத்தில் பட்டங்களை பெறும் வகையில், தாமதத்தை சரிகட்டும் வகையில் பணி நாட்களை இந்த கல்வி ஆண்டில் செயல்படுத்தும் வகையில் இடைவேளை மற்றும் விடுமுறைகளை சரிகட்ட வேண்டும்.
- கடந்த 29.4.20 மற்றும் 6.7.20 ஆகிய தேதிகளில் பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ள கற்பித்தல் வழிமுறைகள், தேர்வு நடத்தும் முறைகள், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளில் மாற்றம் ஏதும் இல்லை.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post: