Join Whatsapp Group

Join Telegram Group

தமிழ் வழி சான்றிதழை (PSTM) ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

By Bharani

Updated on:

அரசு துறைகளில் பணியாளர்களை நியமனம் செய்வதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டை பெற, சம்பந்தப்பட்ட பணிக்கான கல்வி தகுதியை, ஒன்றாம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என, நிபந்தனை உள்ளது.

இதன்படி, பணி நியமனம் பெறுவோர், தமிழ் வழியில் படித்த சான்றிதழ்களை, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் பெற வேண்டும். இந்நிலையில் இதுநாள்வரை அதற்கான விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அளித்து பெற்று வந்தனர். இந்த நடைமுறையில் தேர்வர்களுக்கு சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதமானதை கருத்தில் கொண்டு  இனி தமிழ் வழி சான்றிதழ் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்ற முறையை பள்ளி கல்விதுறை அறிமுகபடுத்தியுள்ளது. அதனை எவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்

  • நீங்கள் தமிழ் வழியில் சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க உங்கள் அருகில் உள்ள இ சேவை மையத்திற்க்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
  • அல்லது உங்கள் தாலுகா அலுவலகம் சென்று இ சேவைமையத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • அல்லது உங்கள் அருகில் உள்ள பிரவுசிங் செண்டர் சென்றும் நீங்கள் ஆனலைனில் விண்ணப்பிக்கலாம்.
  • அதேபோல் எங்கும் அலையாமல் உங்கள் மொபைலில் நீங்களே விண்ணப்பிக்கலாம். எப்படி என பார்ப்போம் வாருங்கள்.
முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx# என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும். அடுத்து அதில் உள்ள  Sing up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில்  தங்களுடைய முழு பெயர், மாவட்டம், தாலுக்கா, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login Id, Password, Confirm Password மற்றும் Captcha code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு Sign up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு OTP எண் அனுப்பப்படும். அந்த OTP  எண்ணினை டைப் செய்து Enter என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Registration ஆகிவிடும். அடுத்து Login செய்வதற்கு மறுபடியும் Homepage-க்கு செல்லுங்கள் அவற்றுள் User Name, Password டைப் செயுங்கள். அதன்பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha Code-ஐ டைப் செய்யுங்கள்.பின்பு Login என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய ID லாகின் ஆகிவிடும். அல்லது உங்கள் மொபைல் எண்பதிவு செய்து அதில் வரும் OTP மூலமும் லாக் இன் செய்யலாம் லாக் இன் உள் சென்றவுடன் அதில்  Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு அதில்  Revenue department என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இவற்றை கிளிக் செய்தவுடன் Revenue department-யில் என்னென்ன சேவைகள் உள்ளது என்று list out காட்டப்படும். அவற்றில் நீங்கள் என்ன விண்ணப்பிக்க போகின்றீர்களோ அதனை செலக்ட் செய்து Processed என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அடுத்து  CAN நம்பர் பதிவு செய்ய வேண்டும் அதில் உங்கள் விவரம், தந்தை பெயர், தாயார் பெயர், குடும்ப உறூப்பினர் விவரம் என அனைத்தையும் பதிவு செய்யுங்கள்  அவ்வளவுதான் அடுத்து நீங்கள் செலக்ட்  செய்த கோரிக்கைக்கு   தேவையான Documents-ஐ Upload செய்ய வேண்டும். அதாவது தங்களுடைய புகைப்படம், Any address proof, Birth certificate, Self-declaration போன்றவற்றை Upload செய்ய வேண்டும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் Upload செய்த பிறகு Make payment என்ற ஆப்சன் காட்டப்படும். அவற்றை கிளிக் செய்து கிரிடிட் கார்ட், டெபிட் கார்டினை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் 60/- ரூபாயை செலுத்தவும். இவ்வாறு  இணையதளத்தில் அப்ளை செய்தால், அப்ளை செய்த சில நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த  சான்றிதழை பெற்று கொள்ளலாம்.

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]