தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி
உயர்வு கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு
வழங்க கலந்தாய்வு பிப்ரவரி
27, 28 ஆம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு
பெற கலந்தாய்வு பிப்ரவரி
27, 28 ஆம் தேதி நடைபெறும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
வட்டார கல்வி அலுவலர்
பணிக்கான கலந்தாய்வு பிப்ரவரி
26 ஆம் தேதி நடைபெறும்.
இது
குறித்து அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், தொடக்கக்கல்வி இயக்குனர் மு.பழனிசாமி சுற்றறிக்கை:
தொடக்க,
நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு
கலந்தாய்வு பிப்ரவரி 27,28 ஆம்
தேதிகளில் நடைபெற உள்ளது.
எனவே அனைத்து பள்ளி
தலைமை ஆசிரியர்களும் கலந்தாய்விற்கு தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்ய
வேண்டும்.
இந்த
கலந்தாய்வு மாவட்ட கல்வி
அதிகாரி தலைமையில் நடைபெறும்.
மேலும் கலந்தாய்வில் கலந்து
கொண்டு பதவி உயர்வு
பெற்ற பின் ஏற்படும்
காலிப்பணியிடங்களை கணக்கீடு
செய்து அதற்கு ஏதுவாக
முன்னுரிமை பட்டியல் தயார்
செய்ய வேண்டும். மேலும்
கலந்தாய்வில் கலந்து
கொள்ள வரும் பட்டதாரி
ஆசிரியர்கள் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.