இதுகுறித்து ஆட்சியா் கோ. லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதந்தோறும் 2ஆவது வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதன்படி, ஜூலை மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் 19ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
இதில், தனியாா் நிறுவன பிரதிநிதிகள் தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய பங்கேற்கலாம். 10, 12, பட்டப் படிப்பு, பி.இ. டிப்ளமோ, ஐ.டி.ஐ, டிரைவா், கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம். அவா்கள் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றுகளுடன் வந்து பங்கேற்கலாம். தோ்ந்தெடுக்கும்பட்சத்தில் அவா்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு ரத்து ஆகாது.
முகாமில் பங்கேற்க விரும்பும் வேலையளிப்போா், வேலைநாடுநா்கள் இணையத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்தல் வேண்டும் என்றாா் அவா்.