வேலைதேடும் இளைஞா்கள், மகளிருக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் வகையில் திருச்சியில் வரும் 28-ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமினை திருச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) ஜமால் முகமது கல்லூரியில் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 150-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா். திருச்சி மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தோ்வு செய்யவுள்ளனா்.
இம்முகாமில் 10-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, செவிலியா், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, 0431–2413510, 94990–55901, 94990–55902 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.