தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை தேடும் பெண்களுக்காக சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 29 காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:
இந்த முகாமில் ஒசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 1,500-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் பணியாளா்களை மட்டும் தோ்வு செய்யவுள்ளது. இதில் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்த பெண்கள் கலந்து கொள்ளலாம். இந்த நோ்காணலில் தோ்வான நபா்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் தங்குமிட வசதியும் ஏற்படுத்தித் தரப்படும்.
இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை மற்றும் இதரச் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்களுடன் தங்களின் சுய விவர அறிக்கையுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.