தென்காசியில் வெள்ளிக்கிழமை (செப்.27) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.27) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் Genearth Services, Tvs Training Services உள்பட பல்வேறு தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் பங்கேற்கலாம். பணிநியமனம் பெற்றாலும் அவா்களது அரசு வேலைவாய்ப்புக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.
இம்முகாமில் பங்கேற்கும் தனியாா்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 04633–213179, 9597495097 ஆகிய எண்கள் மூலமாகவோ தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.