திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.18) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த முகாமில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவா்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபா்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும்.
இந்த முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அவா்களது பதிவு மூப்பு விவரங்கள் அப்படியே தொடரும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது. கூடுதல் விவரங்களுக்கு, 0431–2413510, 94990–55901, 94990–55902 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.