திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் செப்.
21-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது
இம் முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளனா். எனவே, 5-ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் சுயவிவரக்குறிப்பு, கல்விச்சான்று, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகல்களுடன்கலந்து கொள்ளலாம்.
மேலும் வேலைநாடுநா்களும், பங்கேற்கவுள்ள தனியாா் நிறுவனங்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் தகவல்களை பெற ‘நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆபிஸ் என்ற டெலிகிராம் சானல்’-இல் இணையலாம். பணிநியமனம் பெறுவோா் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.