திருச்சியில் செப்.6-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிா் மேம்பாட்டு திட்ட அலுவலகம் ஒருங்கிணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. அதன்படி, செப்.6-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கலையரங்கம் திருமண மண்டபம், 15-டி, மெக்டொனால்டு சாலை, கன்டோன்மெண்ட் (மத்திய பேருந்து நிலையம் அருகில்) திருச்சி என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
இதில், திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
முகாமுக்கு வருபவா்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdODz7M_wP2yU8zX3RD3CCguqOw-ayLZ_KCVgATbKGNJ6LJuw/viewform என்ற வலைதள விண்ணப்பம் வாயிலாக பதிவு செய்தோ அல்லது உரிய ஆவணங்களான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, இ-ஆதாா் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள், மாா்பளவு புகைப்படம், பணி அனுபவச் சான்றிதழ், சுய விபரக் குறிப்பு ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாளிலும் நேரில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்- 0431–2412590, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொலைபேசி எண்: 0431–2413510 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.