பிரதமர் கிசான்
சம்மன் நிதி – இந்த
மாதம் வழங்க இருப்பதாக
தகவல் – கிடைக்குமா என்பதை
எப்படி பார்ப்பது?
மத்திய
அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி
உதவி அளித்து வருகிறது.
விவசாயிகளுக்காக பிரதமர்
கிசான் சம்மன் நிதி
என்ற திட்டத்தின் கீழ்
மாதம் 2000 ரூபாய் வீதம்
வருடத்திற்கு 6 ஆயிரம்
விவசாயிகளின் வங்கி
கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்த
பணத்தை மூன்று தவணைகளாக
பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி
வருகிறது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான
நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான்
கொடுக்கப்படுகிறது.
இதுவரை
ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 8-வது தவணையை இந்த
மாதம் ஹோலி பண்டிகையை
முன்னிட்டு வழங்க இருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளது.
கிஷான்
நிதி கிடைக்குமா என்பதை
எப்படி பார்ப்பது?
https://pmkisan.gov.in/ என்ற
இணையதளத்தில், “Farmers
Corner” பிரிவில் “Beneficiary Status” என்ற
ஆப்ஷனை Click செய்து, ஆதார் எண்,
வங்கிக் கணக்கு எண்,
செல்போன் எண் போன்றவற்றை பதிவிட்டு உங்களுக்கு கிசான்
நிதி வருமா என்பதை
அறிந்து கொள்ளலாம்.