அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு; முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது.
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.