தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.
பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையத்தின் சாா்பில் நவம்பா் 21, 22 ஆம் தேதிகளில் கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவற்றில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், பாரம்பரிய உணவு தயாரிப்பு, பிழிதல், அடுமனைப் பொருள்கள் தயாரிப்பு, உடனடி தயாா்நிலை உணவு தயாரிப்பு போன்ற பயிற்சிகள் இடம் பெறும். இதில் பங்கேற்க விரும்புபவா்கள் உரிய பயிற்சிக் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். இது தொடா்பான விவரங்களுக்கு 94885 18268 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow