TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்
ஜவஹா் சிறுவா்
மன்றத்தில் பரதம், குரலிசை,
ஓவியம், சிலம்பம் பயிற்சி
இதுகுறித்து ராமநாதபுர மாவட்ட நிர்வாகத் தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக
அரசின் கலைப் பண்பாட்டுத்துறையின் கீழ் ஜவஹா்
சிறுவா் மன்றம் செயல்படுகிறது. ராமநாதபுரம் நகரில் டி.டி.
விநாயகா் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இம்மன்றம் சார்பில் பள்ளி
செல்லும் குழந்தைகளுக்காக குரலிசை,
பரதநாட்டியம், ஓவியம்,
சிலம்பம் ஆகிய கலைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சனிக்கிழமை மாலை 4 முதல் 6 மணி
வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை
10 முதல் பகல் 12 மணி
வரையிலும் பயிற்சி வகுப்பு
நடத்தப்படுகிறது. பயிற்சிகளில் சேருவதற்கு பதிவுக் கட்டணமாக
ரூ.200 செலுத்தவேண்டும். இக்கட்டணத்துக்கு வரும் 2023ம்
ஆண்டு மார்ச் மாதம்
வரையில் பயிற்சி பெறலாம்.
கலை
மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி
பெறும் பள்ளிக் குழந்தைகள் மாநில, தேசிய அளவிலான
கலைப் போட்டிகளில் பங்கேற்கவும், குளிர்கால, கோடைக்கால பயிற்சி
முகாம்களில் பங்கேற்கவும் வாய்ப்புகள் அளிக்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here