கவிதை எழுத
பழக
பயிற்சி
பழக
பயிற்சி
கவிதை
என்பது உள்ளத்தில் வெட்டிவிட்டு போகும் ஒரு மின்னல்.
உணர்வுகளைசுருக்கமாக சிறப்பாக
கொட்டுவதற்கான ஒரு
வடிவம்.
மற்ற
இலக்கிய வடிவங்களை போல்
அல்லாமல், வரிக்கு வரி
யோசித்து எழுதக்கூடியதில்லை.முதல்
வரியை எண்ணியவுடனேயே, அதே
மாத்திரை அளவு உச்சரிப்பு, தொனி உள்ள மோனையும்,
எதுகையும் கட்டிப்புரண்ட கலவையாய்,
குறைந்தபட்சம் ஐந்தாறு
வார்த்தைகள் நினைவில் பளீரிட்டு,
அதை தொடர்ந்து அடுத்த
வரி, அடுத்த வரி
ஓடி வரவேண்டும்.இலக்கணம்‘
இல்லையென்றாலும், உணர்வுடன்
ஓசை நயத்துடன் வெளிப்படும் எதுவுமே கவிதை தான்.
பழந்தமிழ்
இலக்கியத்தில் ஆழ்ந்து,
அதன் சுவை அறிந்து
படித்தாலே, சுலபமாக கவிதை
எழுதலாம் என திருப்பூர் மாவட்ட இளைஞர்கள், பள்ளி
கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
விடுக்கின்றனர், திருப்பூரை சேர்ந்த எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும்.
எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன்,துசோ
பிரபாகர், அழகுபாண்டி, அரசப்பன்
இணைந்து, கவிதை பட்டறையை
நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும்
13ம் தேதி டைமண்ட்
தியேட்டர் அருகேயுள்ள திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடக்கும்
பயிற்சி பட்டறையில் பங்கேற்க
விரும்புவோர், 93457 20140 எண்ணை
தொடர்பு கொள்ளலாம்.