கோடைக்காலங்களில், கோழிகள் பராமரிப்பு குறித்து வரும், 1ல் ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது என, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி அடுத்த குண்டல்பட்டியிலுள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 1ல் கோடைக்காலங்களில், கோழிகள் பராமரிப்பு குறித்து, கோழி பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், கோடைக்காலங்களில் கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், இறந்த கோழிகளின் உள்ளுறுப்பில் நோயினால் ஏற்படும் மாறுதல்கள் குறித்தும், பயிற்சியில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் கோழி பண்ணையாளர்களும், கோழி வளர்க்கும் பொதுமக்களும், நோய் அறிகுறிகள் தென்படும் தங்களது கோழிகளை, பயிற்சி நாளன்று, இந்த மையத்துக்கு கொண்டு வந்து பயன்பெறலாம். பயிற்சிக்கான முன்பதிவை, 04342 – 288420 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பயிற்சி நாள் அன்று நேரிலோ மேற்கொள்ளலாம்.