மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.
தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 3359 பணியிடங்களுக்கு செப்.,17 வரை விண்ணப்பிக்கலாம், எழுத்துத்தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் ஆக.,21 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்க உள்ளது. மேலும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 2 மற்றும் 4 பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரி தேர்வுகளும் நடந்து வருகிறது.இப்போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், tamilnaducareerservices.tn.gov.in ல் பெயரை பதிவு செய்து, போட்டித் தேர்வுக்கான பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த படிவ நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும் என, துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.