HomeBlogதமிழக தபால்துறை தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா எதிரொலி
- Advertisment -

தமிழக தபால்துறை தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா எதிரொலி

Postponement of Tamil Nadu Postal Examinations - Corona Echo

தமிழக தபால்துறை
தேர்வுகள் ஒத்திவைப்புகொரோனா
எதிரொலி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம்
அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக
12
ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கி நீட் நுழைவுத்தேர்வு, குரூப் தேர்வுகள் உட்பட
பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக
தபால்துறையில் காலியாக
இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்த நிலையில் அந்த
தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த
வகையில் வரும் ஜூன்
மாதம் தபால்துறை தேர்வுகள்
நடைபெறும் என கடந்த
ஆண்டு மார்ச் மாதமே
அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்
படி தமிழக தபால்துறையில் சேமிப்பு வங்கி, ஜூனியர்
அக்கவுன்டன்ட், போஸ்ட்மேன், மெயில் கார்டு, டிஸ்பேட்ரைடர், எம்டிஎஸ், ஜிடிஎஸ், போன்ற
பணிகளுக்கு ஜூன் மாதம்
தேர்வுகள் நடத்தப்பட இருந்தது.

மேலும்
சார்ட்டிங் மற்றும் தபால்
உதவியாளர் பதவி உயர்வுக்கான தேர்வுகளையும் ஜூன்
மாதம் நடத்த தபால்துறை
திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ்
பாதிப்பு உயர்ந்து வருவதால்,
இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என தலைமை
தபால்துறைக்கு பல்வேறு
கோரிக்கைகள் எழுந்து வந்தது.
இதை கருத்தில் கொண்டு
தபால் துறைக்கான போட்டித்தேர்வுகளை ஒத்தி வைப்பதாக
தபால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -