தமிழகத்தில் 12ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
CORONA வேகமாக பரவி வருவதையடுத்து தமிழகத்தில் 12ஆம் வகுப்பு
பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட ஒன்று வகுப்பு
முதல் 11ஆம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு தேர்வு
ரத்து செய்யப்பட்ட நிலையில்,
12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி
முதல் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 18.04.2021 அன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு
செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
நாடு
முழுவதும் CORONA இரண்டாம்
அலை அச்சுறுத்தி வரும்
நிலையில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ
உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தின் 12ஆம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.