தொற்றுநோய் மருத்துவமனையில் பட்டய படிப்பு பயிற்சி – பிப்ரவரி 19 முதல் விண்ணப்பிக்கலாம்
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில் நுட்புணர் பட்டய படிப்பு பயிற்சி பெறுவதற்கு பிப்ரவரி 19 முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புணர் பட்டய படிப்பு பயிற்சி தொடங்கப்பட உள்ளதால் இந்த பயிற்சிக்கு மாணவ மாணவிகள் ஒற்றைச் சார்ந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான விண்ணப்பம் , தொற்றுநோய் மருத்துவமனை எண் 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை, சென்னை 600081 என்ற முகவரியில் உள்ள மருத்துவமனை அலுவலகத்தில் பிப்ரவரி 19 முதல் 25 வரை விநியோகிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow