அஞ்சல் துறையின் கடிதம் எழுதும் போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்று கடிதம் எழுதி ரொக்கப் பரிசுகளைப் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பி. முருகேசன் கூறியது: இந்திய அஞ்சல் துறை சாா்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி வரும் அக். 31 வரை நடத்தப்படுகிறது. இப்போட்டி 18 வயது வரை ஒரு பிரிவாகவும் 18 வயதுக்கு மேல் ஒரு பிரிவாகவும் நடத்தப்படும்.
போட்டிக்கான கடிதத்தை ‘புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா’ – ஈஐஎஐபஅக ஐசஈஐஅ ஊஞத சஉர ஐசஈஐஅ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் உள்நாட்டுக் கடிதம் ( இன்லேன்ட் – ரூ. 2.50) அல்லது கடித உறை (ரூ. 5) ஆகியவற்றில் எழுதி முதன்மை அஞ்சல் துறைத் தலைவா், தமிழ்நாடு வட்டம் , சென்னை – 600 002 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். உள்நாட்டுக் கடிதப் பிரிவில் 500 சொற்களுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் 1000 சொற்களுக்கு மிகாமலும் கைப்பட எழுதி அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கு பெறுவோரின் பெயா் மற்றும் முகவரியை தவறாமல் குறிப்பிட வேண்டும். மாணவா்கள் பள்ளியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். போட்டியில் மாநில அளவில் வெல்வோருக்கு ரூ. 25 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல, தேசியளவில் வெல்வோருக்கு ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.