முதுகலை பட்டதாரி
ஆசிரியர் தேர்வு: ஆங்கிலம்,
கணித பாட அட்டவணை
– ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலை
பட்டதாரி ஆசிரியர்தேர்வில் கணிதம்,
ஆங்கிலம், கணினி அறிவியல்
பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு
வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வு வாரியத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதுகலை
பட்டதாரி ஆசிரியர்தேர்வுக்கான கால
அட்டவணையை ஆசிரியர் தேர்வு
வாரியம் கடந்த 28ம்
தேதி வெளியிட்டது. அதன்படி,
கணினிவழி தேர்வு பிப்.12
முதல் 15ம் தேதி
வரை நடைபெற உள்ளது.
அந்த அட்ட வணையில்
கணிதம், ஆங்கிலம், கணினி
அறிவியல் ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வு இடம் பெறவில்லை.
இந்நிலையில், இந்த 3 பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணையையும் ஆசிரியர்
தேர்வு வாரியம் நேற்று
வெளியிட்டது. அதன்படி, கணிதத்
தேர்வு பிப். 16ம்
தேதி காலை, பிற்பகல்
மற்றும் 17ம் தேதி
காலை நடை பெறுகிறது.
ஆங்கில
பாடத் தேர்வு 17ம்
தேதி பிற்பகல் மற்றும்
18ம் தேதி காலை,
பிற்பகல் நடைபெறும். 19ம்
தேதி நகர்ப்புற உள்ளாட்சி
தேர்தல் வாக்குப்பதிவு காரண
மாக அன்று தேர்வு
கிடையாது. 20ம் தேதி
காலை கணினி அறிவியல்
பாடத் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் தேதி
பின்னர் அறிவிக் கப்படும்.
இந்த தேர்வுக்கால அட்டவணை
நிர்வாக காரணங்கள் மற்றும்
பெருந்தொற்று சூழ்நிலை
யைப் பொருத்து மாறுதலுக்கு உட்பட்டது.