மாதம் தோறும் 5 ஆயிரம் பயில் உதவித் தொகையுடன் தொல்லியல் துறையில் முதுகலை பட்டைய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் விபரம்- 2023 -2025 கல்வி ஆண்டுக்கான முழுநேர முதுகலை பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது நேர்முகத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு மூலமாக பட்டைய படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
எழுத்து தேர்வு வரும் ஜூலை 23 அன்று சென்னை ,விழுப்புரம் சேலம் ,திருச்சி மதுரை, ஆகிய மையங்களில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கு கல்வெட்டியல் முதுநிலை பட்டய படிப்பு, மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியவியல் முதுநிலை பட்டய படிப்பு, தொல்லியல் முதுநிலை பட்டய படிப்பிற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். கல்வெட்டியில் முதுநிலை பட்டய படிப்பிற்கு தமிழ் இந்திய வரலாறு வரலாறு, பண்டைய வரலாறு, மற்றும் தொல்லியல் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியவையில் முதுநிலை பட்டய படிப்பிற்கு இளங்கலை கட்டட பொறியியல், அல்லது மானுடவியல் சமூகவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், நிலவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்று முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.இந்த பட்டய படிப்புகளுக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டய படிப்புகளுக்கு 100 கொள்கை வினாக்கள் கொண்ட எழுத்து தேர்வும் விரைவு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு வாயிலாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தகுதியுடைய நபர்கள் www.tnarch.gov.in எனும் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்கள் சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன் இணைத்து முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் தொல்லியல் துறை தமிழ் வளர்ச்சி வளாகம் தமிழ்ச்சாலை எழும்பூர் என்கிற முகவரிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.