HomeBlogமகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டையொட்டி மாணவர்களுக்கான கவிதை போட்டி
- Advertisment -

மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டையொட்டி மாணவர்களுக்கான கவிதை போட்டி

Poetry competition for students on the occasion of the centenary of Mahakavi Bharati

மகாகவி பாரதியின்
நினைவு நூற்றாண்டையொட்டி மாணவர்களுக்கான கவிதை போட்டி

மகாகவி
பாரதியாரின் நினைவு நூற்றாண்டு தினத்தையொட்டிபள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியைஇந்து
தமிழ் திசைநடத்துகிறது.

தேசிய
கவிஎன்று அனைவராலும் பாராட்டப்பெற்ற மகாகவி
பாரதியார், இந்திய தேசத்தின்
விடுதலைக்காகவும், மக்கள்
அனைவரும் ஒற்றுமையோடும் சகோதரத்துவத்துடனும் சமத்துவமாக வாழ
வேண்டுமென்கிற எண்ணத்தோடும் உணர்ச்சிகொப்பளிக்கும் கவிதைகளை
இயற்றிய பெருமைக்குரியவர். அவரது
நினைவு நூற்றாண்டு தினம்
செப்.11 அன்று அனுசரிக்கப்பட உள்ளது.

அதையொட்டி,
மாணவமாணவிகளுக்கான கவிதைப்
போட்டியைஇந்து தமிழ்
திசைநாளிதழ் நடத்துகிறது. இப்போட்டியில், தமிழகம்
மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த
9
முதல் 12-ம்வகுப்பு மாணவமாணவிகள்
கலந்துகொள்ளலாம்.

இந்து
தமிழ் திசைநாளிதழில்
செப்.10 (வெள்ளி) அன்று
இந்த கவிதைப் போட்டிக்கான நுழைவுப் படிவம் வெளியாகும். அந்த நுழைவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ‘எங்கள்
பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்!’ என்று
பாடிய மகாகவி பாரதியின்
கனவை நிறைவேற்றும் எண்ணத்
துடனும், இந்திய தேசத்தை
உலக அரங்கில் மேலும்
முன்னேற்றும் உத்வேகத்துடனும் 20 வரிகளுக்கு மிகாமல் அந்தப்
பக்கத்திலேயே மாணவர்கள்
தங்களின் கவிதையை எழுத
வேண்டும்.

அதை
கத்தரித்து, ‘இந்து தமிழ்
திசைசென்னை அலுவலக
முகவரிக்கோ அல்லது அந்தப்
பக்கத்தை ஸ்கேன் செய்து,
hindutamilthisaievents@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ செப்.20-க்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.

மகாத்மா
காந்தியின் பிறந்த நாளும்,
கர்மவீரர் காமராஜரின் நினைவு
நாளுமான அக்.2-ம்
தேதி கவிதைப் போட்டியின் முடிவுகள் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -