PM Kisan 13வது தவணை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வெளியிட இருப்பதாக அதிகாரப் பூர்வ தகவல் அரசின் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையைப் பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார் என அரசு அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் நிகழ்வின் போது, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 8 கோடி பயனாளிகளுக்கு நிதியை வழங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.