சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பயிற்சி காலமான முதல் 6 மாதத்துக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்டும்.
அதன்பிறகு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
RT Camp எனும் ஐடி நிறுவனம் என்பது வெப் சொல்யூசன் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி ஆர்டி கேம்ப் நிறுவனத்தில் ரியாக்ட் இன்ஜினியர் டிரெய்னி (React Engineer – Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட், மைஎஸ்க்யூஎல் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் பிரேம்வொர்க்ஸ் என அழைக்கப்படும் Next.Js மற்றும் Tailwind பற்றி தெரிந்திருக்க வேண்டம். அதுமட்டுமின்றி கொலாபோரேட்டிவ் டெவலப்மென்ட்டுக்கான கன்ட்ரோல் சாப்ட்வேர் GiT பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை கற்கும் திறமை இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி பேக்கேஜ் மேனேஜர்களான npm, yarn, Vite மற்றும் பேக்கேஜ் லைப்ரேரிகளான Redux, Zustand FshlfyhAgfg bodfIef. யூனிட் டெஸ்ட்டிங் பிரேம்வொர்க் பற்றி புரிந்து வைத்திருப்பதோடு, CPU, RAM, Motherboard உள்ளிட்டவை பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் RTcamp ஐடி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சென்று ஆன்னைில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் விரைந்து விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் 6 மாதம் Probation எனும் பயிற்சி காலமாகும். இந்த காலக்கட்டத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதன்பிறகு பணி நியமனம் பெறும்போது ஆண்டு சம்பளம் குறைந்தபட்சம் ரூ.12 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.18 லட்சம் வரை இருக்கும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் புனேவில் நியமனம் செய்யப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்