P.hD பயிலும்
SC, ST மாணவா்களுக்கு ரூ.
1 லட்சம் உதவித் தொகை
முழு
நேர P.hD பயிலும்
ஆதி திராவிடா், பழங்குடியினா், மதம் மாறிய கிறிஸ்தவ
ஆதி திராவிட மாணவா்கள்
ஆண்டுக்கு ரூ.1 லட்சம்
உதவித் தொகை பெற
விண்ணப்பிக்கலாம் எனத்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆதி
திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சார்பில்
கடந்த ஆண்டு நவ.25ம்
தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், முழு நேர முனைவா்
பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதி திராவிடா், பழங்குடியினா், மதம் மாறிய கிறிஸ்தவ
ஆதி திராவிட இன
மாணவா்களுக்கு தலா
ரூ.1 லட்சம் வீதம்
2021-2022ம் ஆண்டு முதல்
வழங்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,
பின்வரும் விதிமுறைகளுக்கு உள்பட்டு
2021-2022ம் ஆண்டில் முழு
நேர முனைவா் பட்டப்
படிப்பு பயின்ற ஆதி
திராவிடா், பழங்குடியினா் மற்றும்
மதம் மாறிய கிறிஸ்தவ
ஆதி திராவிட மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத்
திட்டத்தின் கீழ் பகுதிநேர
ஆராய்ச்சி மாணவா்கள் பயன்பெற
இயலாது. கல்வி ஊக்கத்
தொகை வேண்டி விண்ணப்பிக்க முதுநிலைப் படிப்பில் 50 சதவீத
தோச்சி பெற்றிருக்க வேண்டும்.
1,600-க்கும் அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரப்பெற்றால் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்
அடிப்படையில் 1,600 பயனாளிகள்
தோவு செய்யப்படுவா்.
விண்ணப்பதாரா் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி
உதவித் தொகை, நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருத்தல் கூடாது. மாணவருக்கு பல்கலைக் கழகத்தால் அனுமதிக்கப்பட்ட படிப்புப் பிரிவு கால
அளவுக்கு மட்டும் ஊக்கத்
தொகை அளிக்கப்படும்.
முழுநேர
முனைவா் பட்டப் படிப்பை
மேற்கொள்ளும் 1600 மாணவா்களில் கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு,
பொறியியல் பிரிவு மற்றும்
பிற பிரிவுகள் போன்றவற்றுக்கு அந்தந்த ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
தேவையான விகிதாச்சார எண்ணிக்கையில் பிரித்து வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தில் எந்தப் பகுதியும்
விடுபடாமல் முழுமையாக பூா்த்தி
செய்து ‘ஆணையா், ஆதிதிராவிடா் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை–
600005′ என்ற முகவரிக்கு ஜூன்
10ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதி திராவிடா்
நலத்துறை அலுவலகங்களில் பெற்றுக்
கொள்ளலாம்.