நீங்கள் மாத சம்பளம் வாங்குவோர் ஆக இருந்தால், EPFO ஆல் நடத்தப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு கட்டாயம் தெரியும்.
நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரின் பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் செலுத்துகிறது. இதேபோல் ஊழியரும் தனது பங்கிற்கு சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை தனது பிஎஃப் கணக்கில் செலுத்துகிறார். இந்த இரண்டும் சேர்ந்தது தான் ஓய்வூதிய கார்பஸாக செயல்படுகிறது.
இந்த ஓய்வூதிய கார்பஸ் தொகை பணியாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பணம் கிடைக்கும். இதேவேளையில் பணியாளர்கள் அவரச காலக்கட்டத்தில் இந்த பிஎப் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவை பெற முடியும். மேலும் பிஎப் கணக்கில் இருக்கும் தொகைக்கு மத்திய அரசு வட்டி வருமானத்தை அளிக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊழியர்கள் பிஎப் கணக்கில் ஒரு நிறுவனத்தின் முதலாளி தனது பங்கு பணத்தை டெபாசிட் தொகையை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா.? நிர்வாகம் உரிய தொகையை தெலுத்தாவில்லை என்பதை எப்படி கண்டுப்பிடிப்பது.?
பிஎப் தொகை என்பது ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் ஒவ்வொரு நிறுவனமும் ஊழியரின் பிஎப் கணக்கில் ஒவ்வொரு மாதத்திற்கான தொகையை செலுத்துவதை பல வகையில் ஆய்வு செய்கிறது. இந்த நிலையில் ஒரு நிறுவனம் பிஎப் தொகையை செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்.
ஒரு நிறுவனம் தனது பங்கை ஊழியரின் பிஎஃப் கணக்கில் செலுத்தவில்லை என்றால், சட்டத்தின்படி நிலையான வட்டி விகிதத்துடன் அவர் செலுத்த வேண்டியிருக்கும். ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பை செலுத்தாததும் குற்றமாக கருதப்படுகிறது. அரசு சட்டப்படி முதலாளியிடமிருந்து பணத்தை வட்டியுடன் வசூலிக்கலாம்.
பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான வட்டி விகிதங்களை EPFO அமைப்பு நிர்ணயித்துள்ளது. செலுத்தாத மொத்த பணத்திற்கும் அதாவது 100 சதவீத தொகைக்கும் 12 சதவீத வருடாந்திர வட்டியுடன் சேர்த்து அபராதமாக விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
இதேபோல் ஒரு நிறுவனத்தின் ஊழியர் EPFO அமைப்பில் நிறுவனத்திற்கு எதிராக புகார் பதிவு செய்யலாம். இதேபோல் கால தாமதத்திற்கு ஏற்ப வட்டி விகிதமும் மாறும். உதாரணமாக ஒரு நிறுவனம் பிஎப் கணக்கில் பணம் செலுத்துவதில் 2 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாக தாமதம் இருந்தால் நிறுவனம் ஆண்டுக்கு 5 சதவிகிதம் வட்டி செலுத்த வேண்டும்.
இதேபோல் 2-4 மாதங்களுக்கு இடையிலான தாமதத்திற்கு 10 சதவீதம் வட்டி விகிதம், 4-6 மாதங்களுக்கு இடையிலான இடையிலான தாமதத்திற்கு 15 சதவீதம் வட்டி விகிதம், 6 மாதங்களுக்கு 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் தாமதம் இருந்தால், நிறுவனம் ஆண்டுக்கு 25 சதவிகிதம் வட்டி செலுத்த வேண்டும்.