கன்னியாகுமரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள், நடமாடும் மதி அங்காடிகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், கன்னியாகுமரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஊரக மாற்றுதிறனாளி சுய உதவிக் ழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடமாடும் மதி அங்காடிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிகழ் ஆண்டில், 3 மதி அங்காடிகள் அமைத்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அங்காடி அமைப்பதற்கு, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறப்பு சுய உதவிக்குழுவில் உறுப்பினராகவும், மாற்றுத்திறனாளி சிறப்புக் குழு ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக் கூட்டமைப்பில் உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருப்பது அவசியமானது. பயனாளி பெயரில் வங்கிகளில் கடன் நிலுவை இருக்கக் கூடாது. பயனாளிகளுக்கு கிடைக்கும் மதி வாகனத்தை மற்றவருக்கு விற்பனை செய்வதோ, பெயா் மாற்றம் செய்வதோ கூடாது.
மேற்குறிப்பிட்ட தகுதிகளை உடைய விண்ணப்பதாரா்கள்
அக்.10 -ஆம் தேதிக்குள், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புகட்டடம், இரண்டாவது மாடி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகா்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரியில் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.