Monday, December 23, 2024
HomeBlogதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் B.Ed., படிப்புகளை தொடங்க அனுமதி
- Advertisment -

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் B.Ed., படிப்புகளை தொடங்க அனுமதி

 

Permission to start B.Ed., courses at Tamil Nadu Open University

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் B.Ed., படிப்புகளை தொடங்க அனுமதி

தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி
மூலமாக B.Ed., படிப்புகளைத் தொடங்க என்சிடிஇ, யுஜிசி
ஆகியவை அனுமதி வழங்கியுள்ளன.

இதைத்
தொடா்ந்து இந்தப் படிப்புகளுக்கான சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது
குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திறந்தநிலைப் பல்கலைக்கழக தொலை நிலைக்
கல்வி மூலம் பி.எட்.
பட்டப் படிப்பை 2 ஆண்டுகள்
படிக்க, தேசிய ஆசிரியா்
கல்விக் குழுமம் (என்சிடிஇ),
பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவை
அங்கீகாரம் வழங்கியுள்ளன. அதன்
அடிப்படையில் 2020-21 ஆம்
கல்வியாண்டில் B.Ed., படிப்பில் சேர, பிப்ரவரி,
March மாதங்களில் மாணவா்
சோ்க்கை நடைபெறுகிறது. வகுப்புகள் மே மாதம் தொடங்கும்.
B.Ed., படிப்பில் தமிழ்
வழியில் 500 போ், ஆங்கில
வழியில் 500 போ் என
1,000
மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.
மேலும் தகவல் பெற
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளத்தைக் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -