TAMIL MIXER
EDUCATION.ன்
திருவாரூா் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள்
அடையாள
அட்டையுடன்
ஆதார்
எண்ணை
டிச.30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் – திருவாரூா்
திருவாரூா் மாவட்டத்தில்
உள்ள
மாற்றுத்திறனாளிகள்
அடையாள
அட்டையுடன்
ஆதார்
எண்ணை
டிச.30ம் தேதிக்குள் இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில்
உள்ள
மாற்றுத்திறனாளிகள்
அனைத்துத்
திட்டங்களிலும்
பயனடைய
ஆதார்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான
அடையாள
அட்டை
பெற்றுள்ள
அனைவரும்
தங்களது
ஆதார்
எண்ணை
அடையாள
அட்டை
எண்ணுடன்
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தில்
இணைக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகம்
மூலம்
மாதாந்திர
பராமரிப்பு
உதவித்தொகை
பெற்றுவரும்
மாற்றுத்திறனாளிகள்,
தொடா்ந்து
உதவித்தொகை
பெற
ஆதாரை
இணைப்பது
அவசியம்.
மேலும், ஆண்டுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய மாற்றுத்திறனாளி
உயிருடன்
உள்ளார்
சான்றை
சம்பந்தப்பட்ட
கிராம
நிர்வாக
அலுவலரிடமிருந்து
பெற்று,
மாற்றுத்திறனாளிகளுக்கான
தேசிய
அடையாள
அட்டை,
ஆதார்
அட்டை,
வங்கிக்
கணக்குப்
புத்தகம்,
குடும்ப
அட்டை,
வாக்காளா்
அட்டை
ஆகியவற்றின்
நகலுடன்
ஆட்சியா்
அலுவலகத்தில்
உள்ள
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தில்
டிச.30ம் தேதிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் சமா்ப்பித்து
உதவித்தொகையை
தொடா்ந்து
பெறலாம்.
ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றுத்திறனாளிகள்,
எழுத்துப்பூா்வமாக
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தில்
பதிவு
செய்ய
வேண்டும்.
மாத
உதவித்தொகை
பெறுவோர்
மட்டுமன்றி,
யுடிஐடி
அட்டை
பெறாத
அனைத்து
மாற்றுத்திறனாளிகளும்,
மாற்றுத்திறனாளிகள்
நலஅலுவலகத்தை
அணுகி,
தங்களது
அடையாள
அட்டை
எண்ணுடன்
ஆதார்
எண்ணை
இணைத்து
பயன்
பெறலாம்.