TAMIL
MIXER EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
– திருவாரூா்
இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2022-2023ம்
நிதியாண்டுக்கான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி
உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு, 1 முதல்
5-ம் வகுப்பு வரை
ரூ.1000, 6 முதல்
8ம் வகுப்பு வரை
ரூ.3000, 9 முதல்
பிளஸ் 2 வரை ரூ.
4000, இளங்கலை பட்ட படிப்புக்கு ரூ. 6000, முதுகலை பட்டப்
படிப்பு, தொழிற்நுட்பக்கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ.7000 என ஓராண்டுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும்
பார்வையற்றோருக்கு வாசிப்பாளா் உதவித்தொகையாக 9 முதல்
பிளஸ் 2 வகுப்பு வரை
ரூ.3,000, இளங்கலை பட்டப்
படிப்புக்கு ரூ.5,000, முதுகலை
பட்டப் படிப்பு மற்றும்
தொழிற்நுட்பக் கல்விக்கு
ரூ. 6,000 என ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது.
2021-2022ம்
நிதியாண்டு திட்டத்தின்கீழ் பயனடைய
அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தொலைதூரக் கல்வி, பயிற்சி
நிறுவனங்களில் பயிலும்
மாற்றுத்திறனாளி மாணவ,
மாணவிகள் முந்தைய கல்வியாண்டு இறுதித் தேர்வில் குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எனவே,
மாற்றுத்திறனாளி மாணவ,
மாணவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள
அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், வங்கிக்
கணக்குப் புத்தக நகல்,
ஆதார் அட்டை நகல்,
மாணவா் பிற துறைகளில்
கல்வி உதவித் தொகை
ஏதும் பெறவில்லை என்று
தலைமையாசிரியா், கல்லூரி
முதல்வரிடம் சான்றிதழ், கடந்த
ஆண்டு மதிப்பெண் சான்று
நகல் (9ம் வகுப்புக்குமேல்) அளிக்கவேண்டும்.
இந்த
விண்ணப்பங்களை ஜூலை
31ம் தேதிக்குள் மாவட்ட
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here