வீட்டை விட்டு
வெளியே வந்தால் ரூ.2000/-
அபராதம் – சென்னை மாநகராட்சி
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகப்படியான உச்சம் பெற்று வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில்
கொரோனாவால் 33 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை
300க்கு மேல் பதிவாகி
உள்ளது. இதனால் ஊரடங்கை
தீவிரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மக்கள்
அதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மே
24 வரை முழு ஊரடங்கு
அறிவித்துள்ளது. மக்கள்
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே
வெளியே வர வேண்டும்
என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அந்த உத்தரவை
மீறி மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுகின்றனர். அவர்களுக்கு காவல்துறையினர் அபராதம்
விதித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனா
பரவல் அதிகமாக உள்ளது.
மருத்துவமனைகளில் போதுமான இடவசதி
இல்லாத காரணத்தினால் இலேசான
அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால்
அவ்வாறு சுற்றுபவர்களுக்கு ரூ.2000/-
அபராதம் விதிக்கப்படும் என
சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.