வெளிநாடு செல்வோர் காவல் துறையின் சான்றிதழை எளிதாக பெற, தபால் நிலைய சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி நாளை தொடங்க உள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதில் காவல்துறையின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறும் நடைமுறையை எளிமையாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, காவல்துறையின் ஆட்சேபனை இல்லா சான்று பெற தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு உத்திரவாதம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது