2012 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் பல காரணங்களால் இவர்கள் பணி விலகி நிலையில் 12,000 பேர் , 10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ,ஓவியம்,தொழிற்கல்வி தையல், இசை, கணினி அறிவியல் ,தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்று பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கையாண்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 நிர்ணயிக்கப்பட்ட நிலையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வு வர வயது இதுவரை 58 ஆகவே இருந்தது.
இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60 ஆக நீடித்த பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் தற்போது பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயதும் 60 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது