HomeNotesAll Exam Notesபொது அறிவுத் தகவல்கள் – Part 4
- Advertisment -

பொது அறிவுத் தகவல்கள் – Part 4

work 61 Tamil Mixer Education

பொது அறிவுத் தகவல்கள் – Part 4

v
புகழ்பெற்றஜெகந்நாத்” – இந்தியாவில் 250.க்கும் மேற்பட்ட நகரங்கள்,
கிராமங்கள் பெயருக்கு முன்னாள்
ஜெகந்நாத்என்னும் பெயரைக்
கொண்டிருக்கின்றன. இதில்
புகழ்பெற்ற ஜெகந்நாத் பூரியும்
அடங்கும்.
v
தாஜ்மஹால் வெள்ளை நிற
சலவைக் கற்களால் கட்டப்பட்டது. ஆனால் இது மஞ்சள்
நிறமாக காட்சியளிக்கிறது. இதற்கு
காரணம் அங்குள்ள தோல்
பதனிடும் தொழிற்சாலைகளும், பிறதொழிற்சாலைகளும் வெளியிடும் மாசுதான்.
இதற்காகத் தொல்லியல் துறையினர்
சரும அழகிற்காக பயன்படுத்தும் முல்தாணி மட்டியை சுவரில்
தேய்த்து, தூய்மைப்படுத்துகிறார்கள்.
v
ராட்சத சிலந்தி வலை
பப்புவா நியூ கினியாவில் காணப்படும் சிலந்தி வகைகளில்
ஒன்று பொன் சிலந்தி.
இது பெரிய மற்றும்
உறுதியான வலைகளை உருவாக்கும் இனமாகும். சுமார் 1.5 மீட்டர்
குறுக்களவு கொண்டதாக இந்த
வலைகள் உள்ளன. தாங்கிப்பிடிக்கும் குறுக்கு இழைகள்
6
மீட்டர் நீளம் உடையவை.
v
நீர் யானைஉலகில்
உள்ள விலங்குகளில் உருவத்தில் மூன்றாவது பெரிய விலங்கு
நீர் யானை. இவற்றின்
எடை சராசரியாக 1600 கிலோ
வரை இருக்கும். உடலின்
நீளம் 1.5 மீட்டர் இருக்கும்.
உருண்டு, திரண்டு உருளை
போன்ற உடல் அமைப்பு
கொண்டது. இத்தனை பெரிய
உடல் இருந்தாலும் மணிக்கு
30
கிலோ மீட்டர் வேகத்தில்
ஒட்டக்கூடியவை.
v
உலகில் அதிகமான நாடுகளின்
தபால்தலைகளில் இடம்பெற்ற
இந்திய தலைவர் மகாத்மா
காந்தி.
v
சூரியக் கடிகாரம்ரோம்
நகரத்தின் புகழ்பெற்ற பழைமையான
அடையாளங்களில் ஒன்று
அங்குள்ள பாந்தியன் சர்ச்
என்ற தேவாலயம். இது
கி.மு.27.ம்
ஆண்டில் கட்டப்பட்டது. வட்ட
வடிவமாக அமைக்கப்பட்டுள்ள இந்த
கோவிலின் கதவுகள் பித்தளையால் ஆனது. கோவில் கோபுரத்தில் 30 அடி அகலத்தில் வட்டவடிவ
துளை உள்ளது. இந்த
ஓட்டையின் வழியே சூரிய
வெளிச்ஹஸாம் உள்ளே விழும்.
வெளிச்சம் விழும் பகுதியில்
12
ஜன்னல் அமைப்புகள் உள்ளன.
ஜன்னல்களுக்கு எண்
கொடுக்கப்பட்டுள்ளது. சூரிய
ஒளி விழும் ஜன்னலின்
எண் அந்த நேரத்தை
சரியாக குறிக்கிறது. உலகின்
மிகப்பெரிய சூரிய கடிகாரமாகவும் இதை கருதுகிறார்கள். இந்த
பாந்தியன் சர்ச் அதிசயிக்க
வைக்கும் ரோம கட்டிடக்
கலைக்கு சான்றாக விளங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -