பேப்பர் தட்டு
தயாரிப்பு தொழில்
கட்டிட
அமைப்பு:
பேப்பர்
தட்டு தயாரிப்பு பயிற்சி
முறை(paper plate business in tamil): பொறுத்தவரை இயந்திரங்கள் நிறுவ
10 அடி நீள, அகலத்தில்
ஒரு அறை, தேவையான
பேப்பர், தயார் செய்யப்பட்ட பேப்பர்களை பத்திரமாக வைக்க
மற்றொரு அறை, 1.5 ஹெச்பி
மின் இணைப்பு (ரூ.3
000/-). முதலீடு.
பேப்பர்
பிளேட் இயந்திரம் 1 (ரூ.1.4
லட்சம்), பேப்பரை 5, 6, 7, 8, 9, 10,
12 ஆகிய இஞ்ச் அளவுகளில்
வட்ட வடிவில் வெட்ட
பிளேடுகள் மற்றும் அந்த
அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ.54,000/-) என
மொத்தம் முதலீடு ரூ.1.94
லட்சம்.
உற்பத்தி
செய்ய தேவையான பொருட்கள்:
பாலிகோட்
ஒயிட் பேப்பர் (திக்
ரகம் டன் ரூ.72,000/-,
நைஸ் ரகம் ரூ.40,000/-)
சில்வர் திக் டன்
ரூ.38,000/-, சில்வர்
நைஸ் டன் ரூ.30,000/-,
புரூட்டி பேப்பர் திக்
டன் ரூ.50,000/-, நைஸ்
ரகம் ரூ.38,000/-
பொருட்கள்
கிடைக்கும் இடங்கள்:
பேப்பர்
பிளேட் மெஷின் (paper plate
business in tamil) சென்னை, கோவை உள்ளிட்ட
பெரும்நகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர்
திக் ஆகியவை சிவகாசி,
சில்வர் நைஸ் டெல்லி,
புரூட்டி பேப்பர் திக்,
நைஸ் ஆகியவை கேரளாவிலும் மலிவாக கிடைக்கின்றன.
உற்பத்தி
செலவு:
பேப்பர்
தட்டு தயாரிப்பு முறை
(paper plate business in tamil) பொறுத்தவரை ஒரு
நாள் வாடகை, மின்
கட்டணம் மற்றும் உற்பத்தி
பொருட்கள் 10,000/- தயாரிக்க
ஆகும் செலவு ரூ.7,700/-
மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம்
பிளேட் உற்பத்திக்கு ரூ.1.92
லட்சம் தேவை.
வருமானம்:
ஒரு
பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா
லாபம் கிடைப்பதால் தினசரி
லாபம் ரூ.2,000/-. 25 நாளில்
ரூ.50,000/- லாபம்
கிடைக்கும்.
பேப்பர்
தட்டு தயாரிப்பு முறை:
பேப்பர்
தட்டு தயாரிப்பு முறையில்
முதலில் பேப்பர் பிளேட்
இயந்திரம் இரண்டு பாகங்களை
கொண்டது. ஒன்று கட்டிங்
மெஷின், இரண்டாவது பேப்பர்
பிளேட் டை மெஷின்.
இரண்டும் மின்சாரத்தில் இயங்கக்
கூடியவை.
தயாரிக்க
வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை கட்டிங்
மெஷினில் பொருத்த வேண்டும்.
கட்டிங் வளையத்துக்கு கீழ்
பிளேட்டுக்குரிய பேப்பரை
மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும்.
வட்ட
வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக
பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை
வரையும் திக் ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங்
செய்யலாம்.
கட்
செய்த பேப்பர்களை பிளேட்
டை மெஷினில் உள்ள
அச்சின் மேல் வைத்து
இயக்கினால் பேப்பரின் ஓரங்கள்
வளைந்து பிளேட்களாக மாறும்.
பேப்பரை
பிளேட்டாக வளைக்க டை
மெஷின் 5 டிகிரி வெப்பம்
இருக்க வேண்டும். அதற்கு
உற்பத்தியை துவக்கும் முன்பு
டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.
நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி
செலோடேப் ஒட்டி பேக்கிங்
செய்ய வேண்டும். பேப்பர்
பிளேட் விற்பனைக்கு தயார்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.