உங்கள் பான் கார்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட உங்களது பெயரில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், இப்போது நீங்கள் எளிதாக அதில் மாற்றங்களைச் செய்யலாம்.
அதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளைப் பயன்படுத்தலாம். உங்கள் பான் கார்டில் உங்கள் பெயரை மாற்ற அல்லது சரிசெய்ய நீங்கள் பின்பற்றக்கூடிய சில எளிய வழிமுறைகள் குறித்து பின்வருமாறு காண்போம்.
- NSDL இணையத்தில் சென்று பெயர் திருத்தம், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம்.
- இதற்காக https://www.onlineservices.nsdl.com/paam/ என்ற தளத்தில் சென்று லாகின் செய்து கொள்ளலாம்.
- பின்னர் அப்ளிகேஷன் வகையின் கீழ், ஏற்கனவே உள்ள பான் தரவு / பான் கார்டின் மறுபதிப்பில் மாற்றங்கள் அல்லது திருத்தம், ரீ ப்ரிண்ட் பான் கார்டு (ஏற்கனவே உள்ள பான் தரவில் எந்த மாற்றமும் இல்லை) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதையடுத்து வகையின் கீழ், தனிநபர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கீழ்காணும் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- கடைசி பெயர் / குடும்பப்பெயர், முதல் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, நீங்கள் இந்தியாவின் குடிமகனா, உங்கள் பான் எண்,எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, எங்களுக்கு தரவைச் சமர்ப்பிப்பதன் மூலமும் / அல்லது எங்கள் என்.எஸ்.டி.எல் இ-கோவ் டின் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இறுதியாக கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு அப்ளிகேஷனை சப்மிட் செய்யவும். தனை சப்மிட் செய்த பிறகு பேமெண்ட் ஆப்சனை சப்மிட் கிளிக் செய்ய வேண்டும். இது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டில் இருந்து செய்து கொள்ளலாம். இதனை கொடுத்த பிறகு reference number மற்றும் transaction number வரும். இதனை சேவ் செய்து Continue கொடுக்கவும்.
- அதன்பிறகு ஆதார் கார்டின் கீழ் உள்ள authenticate என்பதை கிளிக் செய்யவும். E-KYC என்பதை தொடர்ந்து E-sign கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு Generate OTP என்பதை கொடுக்க வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இந்த ஓடிபியினை பதிவு செய்து க்ளிக் செய்யவும். அதன் பிறகு பிடிஎஃப் பார்மேட்டில் கிடைக்கும். இதனை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.