கன்னியாகுமரியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், பள்ளி மாணவ- மாணவிகளுக்காக 76ஆவது சுதந்திர தின ஓவியப் போட்டி நடத்தப்பட உள்ளது என காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி குமரி அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஆக. 18ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.
மாணவா்கள் 10.30 மணிக்கு முன்னதாக தங்களின் பெயா்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஓவியப்போட்டிக்கான தலைப்பு: எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரா்.
போட்டியில் வரைவதற்கும் தேவையான ஏ 4 அளவு வரைப்படத்தாள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். ஒரு பள்ளியில் இருந்து அதிகபட்சம் 5 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.
மாணவா்கள் தங்களுக்கு தேவையான அட்டை, எழுது பொருள்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். போட்டியைத் தொடா்ந்து நடைபெறும் சிறப்பு நிகழ்வில் சிறந்த 5 வெற்றியாளா்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 7200562301 என்கிற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.