கடந்தாண்டு தவற
விட்டவர்களுக்கு சிவில்
சர்வீஸ் தேர்வை மீண்டும்
எழுத வாய்ப்பு
கடந்த
ஆண்டுக்கான IAS, IPS
உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வு மே
மாதம் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டது.
கொரோனா
ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இத்தேர்வு, கடந்தாண்டு October.ல் நடத்தப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக
ஏராளமான விண்ணப்பதாரர்கள் எழுதாமல்
தவற விட்டனர்.
இந்நிலையில், வயது வரம்பின் அடிப்படையில் கடைசி வாய்ப்பை தவற
விட்டவர்கள் சார்பில் உச்ச
நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் இத்தேர்வை நடத்த
உத்தரவிட வேண்டும், எனக்
கோரப்பட்டது. ஆனால், இந்த
கோரிக்கையை மத்திய அரசு
திட்டவட்டமாக நிராகரித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி
ஏஎம்.கான்வில்கர் அமர்வில்
நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வயது வரம்பு
அடிப்படையில் வழங்கப்படும் கடைசி வாய்ப்பை தவற
விட்டவர்களுக்கு இந்தாண்டு
சிவில் சர்வீஸ் தேர்வில்
ஒருமுறை மட்டும் எழுத
அனுமதி அளிக்கப்படுகிறது.
இதனை
ஒரு முன் உதாரணமாக
எடுத்து கொள்ளக்கூடாது. எதிர்காலத்தில், எந்த பிரிவினருக்கும் ஆதரவாகவோ,
சமத்துவ அடிப்படையிலோ அல்லது
வேறு எந்த உரிமையின்
அடிப்படையிலோ இது
போன்று உரிமை கோரக்
கூடாது, என்று மத்திய
அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.