ஆராய்ச்சி படிப்பு
உதவித்தொகை மாற்று திறனாளிகளுக்கு அவகாசம்
ஆராய்ச்சி
படிப்பில், மாற்றுத் திறனாளி
மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, 31ம்
தேதி வரை அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது.ஆராய்ச்சி
படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் கல்வி
உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில்,
மாற்று திறனாளிகளாக உள்ள
ஆராய்ச்சி மாணவர்களுக்கு, பல்கலை
மானிய குழுவான UGC-யும், மத்திய மாற்று
திறனாளிகள் நலத் துறையும்
இணைந்து, ஆராய்ச்சி படிப்பு
உதவித்தொகை வழங்குகின்றன.இதன்படி,
2021 – 2022ம் கல்வியாண்டுக்கான உதவித்
தொகையை பெற, தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு யு.ஜி.சி.,
அறிவுறுத்தி உள்ளது. இதற்கான
விண்ணப்ப பதிவு, www.ugc.ac.in/ugc_schemes/ என்ற
இணையதளத்தில் துவங்கி
உள்ளது.
வரும்
31ம் தேதிக்குள் மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை
கல்வியில் பெற்ற மதிப்பெண்
அடிப்படையில், உதவி
தொகைக்கான தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, ஐந்து
ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி
உதவித்தொகை வழங்கப்படும்.