ஆன்லைனில் தேசிய
மக்கள் தொகை கணக்கெடுப்பு – விவரங்களை
ஆன்லைனில் பதிவு செய்ய
செயலி
கடந்த
2020-ஆம் ஆண்டு தேசிய
மக்கள் தொகை கணக்கெடுப்பினை மக்கள் தாமாக ஆன்லைன்
மூலமாக பதிவு செய்யும்
திட்டத்தை மத்திய அரசு
நடைமுறைப்படுத்த இருந்தது.
அதன்பின்
CORONA காரணமாக நிறுத்தி
வைக்கப்பட்டது. இந்நிலையில் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் ஒரு மாதத்தில்
நடத்தப்பட உள்ளதால் மீண்டும்
இந்த நடைமுறையை தொடங்க
மத்திய அரசு அனுமதி
வழங்கியுள்ளது.
மக்கள்
அவர்களை பற்றிய விவரங்களை
ஆன்லைன் மூலமாக பதிவு
செய்ய செயலி ஒன்றை
அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த
ஆண்டு புதிய முறையில்
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான விவரங்கள் எதுவும்
இன்னும் வெளியிடவில்லை.
இருந்த
போதிலும் பிறந்தநாள், பிறந்த
இடம், பெற்றோர் பிறந்த
இடம், தாய்மொழி, ஆதார்
எண், தொலைபேசி எண்,
வாக்காளர் அடையாள அட்டை
எண், ஓட்டுநர் உரிமம்
எண் போன்ற விவரங்கள்
ஆன்லைன் மூலமாக பதிவு
செய்ய சேகரிக்கப்பட்ட உள்ளன.
மேற்கண்ட
இந்த விவரங்களை சேகரித்த
பின்னர் பதிவு செய்த
ஒவ்வொருவருக்கும் ஒப்புகை
எண் வழங்கப்படும். இந்த
எண்ணை வீடு தேடி
வரும் அதிகாரிகளிடம் காட்டினால் கணினி அல்லது செல்போன்
மூலம் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்யப்படும்.
மேலும்
இதற்காக மக்களிடம் இருந்து
கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் அல்லது ஆவணங்கள்
எதுவும் சேகரிக்கப்படாது என
மத்திய அரசு தெரிவித்துள்ளது.