தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக இணைய வழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.
B.SC Nursing, GNM, M.SC Nursing, post Basic B.sc 2024 இல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2021, 22, 23 இல் தேர்ச்சி பெற்ற வேலை இல்லாத நர்சிங் பட்டதாரிகளும் இதற்கு தகுதியானவர்கள். வயது 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய www.tahdco.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.