இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஒரு மாதம் இலவச பயிற்சி
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம், அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் 2 இடங்களில் ஒருமாதம் இலவசதொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரித்தல், உலர் பழங்கள், மசாலா பொருட்கள் தயாரித்தல்பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொழில் தொடங்க கடன் உதவி ஆலோசனை, சந்தைப்படுத்த பயிற்சி அளிக்கப்படும். உணவுப்பாதுகாப்புத்துறை, குறு, சிறு, நடுத்தரத்தொழில்கள் நிறுவன சான்றிதழ் பெற்றுத் தரப்படும். டிச.,30 வரை கூடல் நகர் அசோக் நகர் முதல் தெருவிலும், புதுார் வண்டிப்பாதை ரோட்டில்உள்ள மையத்திலும் பயிற்சி அளிக்கப்படும். விபரங்களுக்கு 98652 59422.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow